விளம்பரங்கள்


ஜி.கே. மூப்பனார்
19.08.1931 - 30.08.2001

வாழும் காமராஜர் என்று பொது மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கருப்பையா மூப்பனார், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் என்னும் சிற்றூரில் 1931ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பிறந்தார்.

இவரது தந்தை ஆர். கோவிந்தசாமி மூப்பனார், தாயார் சரஸ்வதி அம்மாள்.

மூப்பனார் தனது 19 ம் வயதில் 1949ம் ஆண்டு கஸ்தூரி அம்மையாரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும் உள்ளனர்.

மூப்பனார் குடும்பம் தஞ்சை மாவட்டத்தில் புகழ் பெற்ற விவசாயக் குடும்பம். பழங்கால காங்கிரஸ்காரர்களை நினைவுபடுத்தும் ஒரு நினைவுச் சின்னமாக வளம் வந்தவர்.

பொது வாழ்வில் தூய்மை அரசியலில் நேர்மை என்ற தாரக மந்திரத்துடன் மற்ற அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர் மூப்பனார். தனது சிறு வயது முதலே மூப்பனார் அரசியிலில் ஆர்வம் காட்டி வந்தார்.

அரசியல் தவிர கர்நடக இசையில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. இவர் திருவையாறு தியாராஜர் உற்சவகமிட்டித் தலைவராக இருந்து வந்தார்.

மேலும் பொது சேவைகள் செய்வதிலும், விளையாட்டிலும் ஆர்வமுடையவராக இருந்தார்.

இசையை ரசிப்பதும், புத்தகங்கள் படிப்பதும் இவருக்கு பொழுது போக்கு.

மூப்பனார் இலங்கையைத் தவிர மற்ற எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. வெளிநாடுகளுக்குச் செல்லாத ஒரே அரசியல்வாதி மூப்பனாராகத்தான் இருக்கும்.